சவுக்கடிப் படுகொலை: கிழக்கு மண்ணில் அழிக்கப்பட்ட 33 உயிர்களின் குரல்...

By Theepachelvan Sep 21, 2026 08:28 PM GMT
Report

ஈழத் தமிழர் வரலாற்றில் கிழக்கு மண் சுமக்கும் படுகொலைகளின் வடு ஆழமானது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் மீதான படுகொலைகளாலும் காணாமல் ஆக்கல்களாலும் அதிர்ந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான், சவுக்கடி, தாளவாய், இருதயபுரம் உள்ளிட்ட பல இடங்கள் அக் காலத்தில் இனவழிப்பின் இரத்தச் சாட்சிகளாகின.

சிறுவர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குச் சாட்சி சத்துருக்கொண்டான் படுகொலை...

சிறுவர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குச் சாட்சி சத்துருக்கொண்டான் படுகொலை...

கிழக்கில் நடந்த இனப்படுகொலைகள் 

1990 செப்டெம்பர் 5ஆம் திகதி வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தஞ்சமடைந்திருந்த 158 தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவமும், செப்டெம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டானில் 184 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் கிழக்கு மண்ணில் தொடர்ந்த பெரும் மனித அழிவின் அடையாளங்களாகப் பதிவாகியுள்ளன.

அந்தத் தொடர் படுகொலைகளின் பின்னணியிலேயே 1990ஆம் ஆண்டு புரட்டாதி 20ஆம் திகதி இடம்பெற்ற சவுக்கடிப் படுகொலையையும் நினைவுகொள்ள வேண்டியுள்ளது.

சத்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று பதினொரு நாட்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி கிராமத்தில் ஆயுதம் ஏந்திய படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மனித உரிமை ஆவணங்கள் பதிவு செய்கின்றன.

அன்றைய நாளில் 33 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகப் பதிவுகளில் அறிய முடிகின்றது.

ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!

ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!

சவுக்கடி எனும் குருதிச் சுவடு

 1990 செப்டெம்பர் 20ஆம் நாள் காலை சவுக்கடி கிராமத்துக்குள் இலங்கை இராணுவத்தினர் சென்றனர். அப்போது கிராமத்தில் இருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

வீடுகளுக்குள் இருந்தவர்களும் தப்பிச் செல்ல முயன்றவர்களும் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர்.   மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படும் இந்தப் படுகொலையில் 10 குழந்தைகளும் ஒரு கைக்குழந்தையும் இருந்ததாகப் பதிவாகியுள்ளது.

மேலும் கடலில் கடற்றொழிலாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. கிராமத்தில் கொல்லப்பட்ட 26 பேரின் உடல்கள் இரண்டு குழிகளில் எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டதாகவும், கடலில் கொல்லப்பட்ட ஏழு கடற்றொழிலாளர்களிள் மரணமும் இந்தப் படுகொலையுடன் தொடர்புடையது.

ஒரு கிராமத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குழந்தைகள்கூட உயிர் தப்பவில்லை என்பது சவுக்கடிப் படுகொலையின் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது.

போரின் பெயரில் ஆயுதம் ஏந்திய தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெற்ற காலமாக இருந்தபோதிலும், ஆயுதமற்ற அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இப் படுகொலைகள் மனித உரிமைக் கேள்வியாக, மாபெரும் இனப்படுகொலைக் குற்றமாக அமைகிறது.

போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்...

போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்...

குழந்தைகளின் மரணம்

சவுக்கடியில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு சாதாரண விடயமல்ல. பத்து குழந்தைகளும் ஒரு கைக்குழந்தையும் கொல்லப்பட்டனர்.

போரின் அரசியலை அறியாதவர்கள். எந்த இராணுவத் திட்டத்தையும் வகுக்காதவர்கள். எந்த ஆயுதத்தையும் ஏந்தாதவர்கள் குழந்தைகள். ஏதும் அறியாமல் அவர்கள் தங்கள் பிறந்த வீடுகளில் இருந்தார்கள்.

அவர்களின் உலகம் அவர்களின் குடும்பங்களும் கிராமமும் மட்டும்தான். ஆனால் அன்றைய நாள், அந்தக் குழந்தைகளின் வாழ்வின் இறுதிநாளாக்கப்பட்டது. இப்படி எங்கள் மண்ணில் காரணம் தெரியாமலே அழிக்கப்பட்டவர்கள் பல குழந்தைகள்.

அதனால்தான் சவுக்கடிப் படுகொலை ஒரு கிராமத்தின் மீதான தாக்குதல் என்ற எல்லையைத் தாண்டுகிறது. அது போரினால் பொதுமக்கள் எவ்வாறு இலக்குகளாக்கப்பட்டார்கள் என்பதற்கான ஒரு சாட்சியாக நிற்கிறது.

சவுக்கடிப் படுகொலையின் மற்றொரு கொடூரமான அம்சம் கடலில் இடம்பெற்ற கொலைகளாகும். கிராமத்துக்குள் இடம்பெற்ற தாக்குதலிலிருந்து தப்பி வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பைப் பெறவில்லை. இதில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

கடல் என்பது அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கான இடம்.  அது அவர்களின் தொழில். அவர்களின் அன்றாட வாழ்க்கை அங்குதான் நிகழ்கிறது. ஆனால் அன்றைய தினம் அந்தக் கடலும் அவர்களைப் பாதுகாக்கவில்லை.

நிலத்தில் மாத்திரமின்றி கடலிலும் எங்கள் மக்களுக்குச் சவக்குழி தோண்டினர். ஒருபுறம் வீடுகளில் மக்கள் கொல்லப்பட்டனர். மறுபுறம் கடலில் தங்கள் தொழிலை மேற்கொண்டிருந்த கடற்றொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.

இதனால் சவுக்கடி கிராமத்தின் குடும்ப வாழ்க்கையும் வாழ்வாதாரமும் ஒரே நேரத்தில் அழிக்கப்பட்டது என்பது கொடியதொரு வரலாறும் நினைவுமாகும்.

தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்...

தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்...

தொடரும் கிழக்கின் நினைவு

சவுக்கடி தனித்த ஒரு சம்பவமாக நிகழவில்லை. அதற்கு முன்னரும் பின்னரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் மனித உரிமை ஆவணங்கள் பதிவு செய்கின்றன.

1990 செப்டெம்பர் 20ஆம் நாளே சவுக்கடிக்கு அருகிலுள்ள தாளவாயிலும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகப் பதிவுகள் உள்ளன. பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கல்கள் தொடர்ந்தன.

இதனால் 1990ஆம் ஆண்டு கிழக்கு மண்ணின் வரலாற்றை ஒவ்வொரு படுகொலையையும் தனித்தனியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அந்தக் காலத்தில் பொதுமக்கள் எதிர்கொண்ட பரந்த வன்முறைச் சூழலின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டியுள்ளது.

சத்துருக்கொண்டானில் இதேபோல இனவழிப்பு நிகழ்ந்தது. வந்தாறுமூலையில் இதேபோல இனவழிப்பு நிகழ்ந்தது. சவுக்கடியிலும் அந்த இனவழிப்பை நிகழத்தினர். இப்படியாக கிழக்கின் பல கிராமங்கள் தங்கள் மக்களை இனப்படுகொலையில் இழந்தன.

உண்மையில் ஆண்டுகள் பல கடந்தாலும் அந்த இனவழிப்பின் நினைவிலிருந்து மீள முடியவில்லை. சவுக்கடியில் கொல்லப்பட்ட 33 மக்களிடையே 10 குழந்தைகளும் ஒரு கைக்குழந்தையும் இருந்தனர் என்பதை ஏலவே குறிப்பிட்டோம்.

சவுக்கடி என்பது கிழக்கு மண்ணில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இனவழிப்பின் சாட்சி. குழந்தைகளின் உயிர்களைக் கூட காப்பாற்றத் தவறிய போரின் கொடூரத்துக்கான சாட்சி. நீதி கிடைக்காமல் கடந்துபோன பல ஆண்டுகளின் சாட்சி.

இப்படியாக ஈழ மண்ணில் நிகழ்ந்த அனைத்து அநீதிகளுக்கு நீதி கிடைக்கட்டும் என்று வலியுறுத்தப்படுகிற போராடுகிற நிலங்களின், சனங்களின் சாட்சி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 21 September, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026