தொடர் சிறை மோதல் பின்னணியில் உள்ள கரங்கள்! அரசாங்கத்துக்கு கிடைத்த புலனாய்வு தகவல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பித்த சிறைமோதல் இன்று பல்ல சேன சிறைச்சாலை வரை நீண்டுள்ளமை குறித்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய நிலையியல் கட்டளை தொடர்பிலான கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் பின்னணி குறித்து கிடைத்துள்ள புலனாய்வு தகவல் என்னவென்றால் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள நபர்களின் சதி என்பதே எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறைச்சாலைகளின் பாதுகாப்பு
குறிப்பாக மெகஸின் சிறையில் நேற்று கலவரம் இடம்பெற்றது. அதில் ஒருவர் பலியாகினார்.

குருவிட்ட சிறை மோதலில் 2 பேர் பலியாகியுள்ளனர். தற்போது பல்ல சேனயில் மோதல் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
இதனை மையப்படுத்தி அனைத்து சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒன்றிணைக்கும் போது திட்டமிட்ட சதி பின்புலம் இருப்பது தெளிவாகியுள்ளது என அமைச்சர் விளக்கமளித்தார்.
தேசிய பாதுகாப்பு
இந்நிலையில் இது தொடர்பில் அந்த சந்தர்ப்பத்தில் தனது கருத்துக்களை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர்,
''இது ஒரு பாரதூரமான நிலை என்பதை அராசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
முன்னதாக இந்த சிறை மோதலை மையப்படுத்தியே நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. இது தேசிய பாதுகாப்புக்கு சவால் விடும் செயற்பாடு.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் நீங்கள் வெற்றி பெற்றதும் மகர உள்ளிட்ட சிறைகளில் மோதல்கள் வெடிக்க ஆரம்பித்தன.
இது குறித்து கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்'' என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |