வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Sri Lanka Department of Meteorology Weather
By Sathangani Sep 21, 2026 06:00 AM GMT
Report

புதிய இணைப்பு

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலையொன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (21) காலை 10 மணி முதல் அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் அந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு - மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடற்பரப்புகளில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம், மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

இது இன்றைய தினம் குறைந்த அழுத்தப் பிரதேசமாகவும், நாளைய தினம் தீவிர குறைந்த அழுத்தப் பிரதேசமாகவும், வலுவடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

கடல் கொந்தளிப்பாக காணப்படும் 

செப்டெம்பர் 23 ஆம் திகதியளவில் இது வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்காள விரிகுடா பகுதியைச் சென்றடையக்கூடும்.

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Low Pressure Area Forms Over Bay Of Bengal Rain

குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அவ்வப்போது அதிகரிக்கக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மேலும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையுடன் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதற்கமைய, மறுஅறிவித்தல் வரை அக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், தற்போது அப்பகுதிகளில் தங்கியுள்ள மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பான கடற்பகுதிகளுக்கு நகர்த்துங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறப்பு பிரதிநிதியாக பைசர் முஸ்தபா! அனோஜன் விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை

சிறப்பு பிரதிநிதியாக பைசர் முஸ்தபா! அனோஜன் விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை

இடியுடன் கூடிய மழை

மேலும் அந்த அறிக்கையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Low Pressure Area Forms Over Bay Of Bengal Rain

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மீண்டும் ஜனாதிபதி பொது மன்னிப்பு! மைத்திரியின் கால நடைமுறை தவறு என்கிறார் ஞானசார தேரர்

மீண்டும் ஜனாதிபதி பொது மன்னிப்பு! மைத்திரியின் கால நடைமுறை தவறு என்கிறார் ஞானசார தேரர்

 பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Low Pressure Area Forms Over Bay Of Bengal Rain

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

யாழ். மாநகர சபை பகுதியில் தொடரும் மின்வெட்டு: மக்கள் அவதி

யாழ். மாநகர சபை பகுதியில் தொடரும் மின்வெட்டு: மக்கள் அவதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்