அடுத்தடுத்து சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் - நாடாளுமன்றத்தில் சலசலப்பு: அரசுக்கு அழுத்தம்
Sajith Premadasa
Department of Prisons Sri Lanka
Death
Prisons in Sri Lanka
Prison
By Thulsi
இலங்கை முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ள அமைதியின்மை குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
நாடாளுமன்றில் இன்று (07.08.2026) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சிறப்பு அறிக்கை ஒன்றின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தகவல்கள் தெரிவிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறையில் இரண்டு மரணங்கள்
நேற்று இரவு மாகசின் சிறையில் ஒரு மரணமும், இன்று காலை குருவிட்ட சிறையில் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.

மேலும், தற்போது பல்லஞ்சேனா சிறையிலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்