ஷிரந்தியை மையப்படுத்திய தங்க மோசடி! சிரிலியவிற்கு பின் அடுக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்

CID - Sri Lanka Police Shiranthi Rajapaksa Singapore
By Dharu Sep 21, 2026 02:03 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தைச் சுற்றியிருந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஒன்றாகக் கூறப்படும் அரச தங்க இருப்பு தொடர்பான குற்றச்சாட்டு, சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அரசியல் விவாதத்தில் கவனம் பெற்றுள்ளது.

2015 ஜனவரி 26ஆம் திகதி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில், இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டது.

அரச தங்க இருப்புக்கு சொந்தமான தங்கத் தொகுதியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் மோசடியில் ஷிரந்தி ராஜபக்ச தொடர்புடையவர் என அப்போதைய பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேரா குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருந்ததாக குறித்த செய்தியில் அடிகோடிடப்பட்டது.

நீதிமன்ற கைகளுக்கு சென்ற மிக் ஒப்பந்த நகல்: லசந்தவின் மரணத்தை தீர்மானித்த ஒரு ஆவணம்

நீதிமன்ற கைகளுக்கு சென்ற மிக் ஒப்பந்த நகல்: லசந்தவின் மரணத்தை தீர்மானித்த ஒரு ஆவணம்

குற்றச்சாட்டுகளில் முக்கியமான அம்சம்

அந்தக் காலகட்டத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமான அம்சம், அரச அதிகாரத்துக்கும் விசாரணை நடவடிக்கைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த கேள்வியாகும்.

தங்க விவகாரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததற்காக தனது கணவருக்கு அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டதாக ஷியாமலி பிரியதர்ஷனி பெரேரா கூறியிருந்தார்.

மேலும், விசாரணையை நிறுத்துவதற்கு அப்போதைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அனுர சேனாநாயக்க திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

ஷிரந்தி ராஜபக்சவின் பெயர் அந்த விசாரணையில் எந்த சந்தர்ப்பத்திலும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அப்போதைய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் இந்த மறுப்பு, குறித்த விவகாரத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக மாறியிருந்தது.

இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை

இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை

ஒன்பது சந்தேகநபர்கள் கைது 

விசாரணை உண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்தால், ஒன்பது சந்தேகநபர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் எனவும் அனுர சேனாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால், 2015ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இந்த விவகாரத்தில் ஒருபுறம் கடுமையான குற்றச்சாட்டுகளும் மறுபுறம் அவற்றை நிராகரிக்கும் அதிகாரபூர்வமான பதில்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசியல் அதிகாரம், காவல்துறை விசாரணைகள் மற்றும் உயர்மட்ட அரசியல் குடும்பத்தைச் சுற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்தப் பழைய செய்தி தற்போது மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.

எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு வெளியான இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவை அக்காலத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான மறுப்புகளுமே ஆகும்.

ஷிரந்தி ராஜபக்ச தங்க மோசடியில் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்பட்ட விடயமா என்பது கேள்விக்குறிய ஒன்று.

இருப்பினும், அக்காலத்தில் அதிகாரத்தில் இருந்த அரசியல் குடும்பத்தைச் சுற்றி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எவ்வாறு விசாரிக்கப்பட்டன, விசாரணைகளுக்கு அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகள் இருந்தனவா என்பன தொடர்பான கேள்விகள், இலங்கையின் அரசியல் வரலாற்றில் தொடர்ந்து விவாதிக்கப்படும் விடயங்களாக இன்றும் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்