உச்சக்கட்ட பதற்றம்: அடுத்தடுத்து சிறைச்சாலைகளில் வெடித்த வன்முறை - இருவர் பலி: பலர் காயம்
புதிய இணைப்பு
குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (06) குறித்த சிறைச்சாலையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கண்ணீர்புகை பிரயோகம்
இந்நிலையில் குறித்த சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கும் கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |