அம்பாறையில் பாரிய விபத்து : இளைஞர்கள் இருவர் பலி!
அம்பாறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்றிரவு (26) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பின்னால் பயணித்த மூவர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது
இவ்வாறு உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அம்பாறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொஸ்கொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியில் யாலேகம சந்திக்கு அருகில், காலி நோக்கிப் பயணித்த அடையாளம் தெரியாத வாகனமொன்று மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |