முல்லைத்தீவு ஏ 9 வீதியில் விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இராணுவ வீரர்
Sri Lanka Army
Sri Lanka Police
Mullaitivu
By Sathangani
முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
முறிகண்டி - ஏ 9 வீதியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரஊர்தி ஒன்றும் திருமுறுகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு திரும்ப முற்பட்ட கப்ரக வாகனமும் இன்று (26) காலை நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் கப்ரக வாகனத்தில் பயணித்த இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுள்ளதுடன் விசாரணைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி