பாலுடன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது..!!
Sri Lanka Army
Vavuniya
Milk
By Vanan
வவுனியா, நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்றுடன் பால் கொள்வனவு செய்து கொண்டு சென்ற வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று முற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில், ஒருவர் காயமடைந்துள்ளதோடு கொள்வனவு செய்துகொண்டு சென்ற ஆயிரக்கணக்கான லீட்டர் பாலும் வீதியில் சிதறி வீணாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நெடுங்கேணி பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கிச் சென்ற இராணுவ வாகனம் ஒட்டுசுட்டான் சம்மளம்குளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்குள் திடீரென சமிக்ஞைகள் எதுவும் காட்டாது திருப்ப முற்பட்ட நிலையில், பின்னால் வந்து கொண்டிருந்த பால் கொள்வனவு வாகனம் இராணுவ வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான லீட்டர் பால் வீதியில் சிதறி வீணாகியுள்ளதோடு பால் ஏற்றிய வாகன சாரதியும் காயமடைந்துள்ளார்.


