யாழில் மது போதையில் சாரத்தியம் - குடும்பஸ்தர் பலி
மதுபோதையில் - அதிவேகமாக பயணித்த உந்துருளியில் இருந்து வீசப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான புலோலி தெற்கை சேந்த இராசு புவனேஸ்வரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரவு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து அதிவேகமாக வேலைத்தளத்தை நோக்கி பயணித்துள்ளார்.
மதுபோதையால் விபத்து
மந்திகை சந்தியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் பயணித்த போது உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில்இருக்கையில் இருந்து அவர் தூக்கிவீசப்பட்டார்.
இதில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவர் உடனடியாக பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியிருந்தார் என மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
