கொழும்பில் கோர விபத்து - முச்சக்கரவண்டி சாரதி பலி!
Sri Lanka Police
Accident
By pavan
பம்பலப்பிட்டியில் கடற்பரப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.
வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று ஜயா வீதி சந்திக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கண்டி ஹந்தான பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்
