வாகனத் தரிப்பிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் - 40 வாகனங்கள் முற்றாக நாசம்! (படங்கள்)

Batticaloa Accident
By pavan Jul 18, 2023 03:13 PM GMT
Report

வாழைச்சேனை கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகனத் தரிப்பிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவமொன்றின் போது மோட்டர் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட 40 இற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது முச்சக்கரவண்டி - 1, மோட்டார் சைக்கிள்கள் - 34, துவிச்சக்கரவண்டி- 8, என 40 வரையிலான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களில் தீ பரவியதால் வெடிச்சத்தம் கேட்டதுடன் புகையுடன் கூடிய இருள் சூழ்ந்த நிலை தீ பரவல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் அச்சமடைந்து ஓடியதுடன் நிலவரம் அறிந்து பொதுமக்கள் தீயினை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

காவல் நிலையத்தில் முறைப்பாடு

வாகனத் தரிப்பிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் - 40 வாகனங்கள் முற்றாக நாசம்! (படங்கள்) | Accident Police Investigating Srilanka

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் பணியாளர்கள், மாணவர்கள் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு பேருந்தில் பயணங்களை மேற்கொள்வது வழக்கமாகும்.

திடிரென ஏற்பட்ட இந்த தீ பரவல் சம்பவத்திற்கு காரணம் இதுவரை கண்டயறிப்படவில்லையென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதில் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் தீயில் அகப்பட்டு சாம்பலாகியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை அடையாளம் கண்டு வாழைச்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 தீ பரவலுக்கான காரணம்  

வாகனத் தரிப்பிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் - 40 வாகனங்கள் முற்றாக நாசம்! (படங்கள்) | Accident Police Investigating Srilanka

வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் மற்றும் கிராம சேவகர் அ.பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை அவதானித்தனர்.

மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீ பரவலா என ஆய்வு செய்ததுடன் சம்பவ இடத்தில் பாதுகாப்பு கருதி மின் துண்டிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத் தரிப்பிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் - 40 வாகனங்கள் முற்றாக நாசம்! (படங்கள்) | Accident Police Investigating Srilanka

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025