காத்தான்குடியில் கோர விபத்து - பாடசாலை மாணவன் உயிரிழப்பு
Batticaloa
Accident
By pavan
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது.
கல்முனை - மட்டக்களப்பு வீதியில் நாவக்குடா பகுதியில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த துவிசக்கரவண்டி வீதியில் வலப்புறம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த வானுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தை ஏற்படுத்திய வான்
விபத்தில் பலத்த காயமடைந்த துவிசக்கரவண்டி ஓட்டி சென்ற மாணவன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சுங்கவில, பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வான் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி