ஆட்டம் காட்டும் அநுர - மகிந்தவை தொடர்ந்து வெளியேறிய மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன (Maithripala Sirisena) கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை இரத்து செய்தல் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதியின் உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளார்
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று (11) காலை முதல் படையெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த இன்று கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளதாக பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்சவை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் சற்றுமுன் கொழும்பில் உள்ள விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
