விபத்தில் உயிரிழந்த யாசகர் - பையில் கண்டெடுக்கப்பட்ட 135,000 ரூபா பணம்
புத்தளம் - சிலாபம் வீதியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த யாசகரொருவரிடம் 135,000 ரூபா பணம் இருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்குகளின் கடவுப் புத்தகங்கள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அனவிலுந்தவ பகுதியில் சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் மோதியதில் உடப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அனவிலுந்தாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ரூ.135,000 ரொக்கம்
அவரது பையை சோதனை செய்ததில் ரூ.135,000 ரொக்கம் மற்றும் ரூ.47,000 மதிப்புள்ள அவரது கணக்குகளின் வங்கி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையில் அவர் பல வருடங்களாக யாசகராக வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
