யாழில் பாரிய விபத்து - முன்னிருந்த இருவர் படுகாயம் (படங்கள்)
Jaffna
Accident
By pavan
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு பகுதியில் பிக்அப் ரக வாகனமொன்று விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம்(10) பதிவாகியுள்ளது.
மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி வந்த பிக்அப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்கம்பத்துடன் மோதியுள்ளது.
விபத்துக்கான காரணம்
இந்நிலையில் வாகனத்தில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தையும் மேலதிக விசாரணைகளை மருதங்கேனி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்