யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - 9 பேர் படுகாயம்(படங்கள்)
Sri Lanka Police
Accident
By pavan
யாழ்ப்பாணம் - கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
குறித்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
9 பேர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
