மட்டக்களப்பில் கோரம்! ஒருவர் பலி - தாயும் மகளும் படுகாயம்
Sri Lanka Police
Batticaloa
Accident
By Vanan
சந்திவெளியில் விபத்து
மட்டக்களப்பு சந்திவெளியில் இடம்பெற்ற கோர விபத்ததில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்திவெளி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சந்திவெளி பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்.
முருகன் கோவில் வீதி கோரகல்லிமடு கிரான் எனும் இடத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஜீவரெத்தினம் சனுஜன் என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார்.
தாயும் மகளும் படுகாயம்
அத்தோடு, சந்திவெளி சந்தை வீதியைச் சேர்ந்த தாயும், 04 வயதுடைய மகளும் பலத்த காயங்களுக்குள்ளாகி சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி