கனரக வாகனத்துடன் மோதுண்ட முச்சக்கர வண்டி - சாரதி தெய்வாதீனமாக தப்பினார்!! (படங்கள்)
accident
akkaraipattu
By Vanan
அக்கரைப்பற்று காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு உணவு ஏற்றி வந்த முச்சக்கர வண்டி ஒன்று கனரக வாகனம் ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்று பாலமுனை வைத்தியசாலைக்கு முன்னால் இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது, முச்சக்கர வண்டியின் சாரதி தெய்வாதீனமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இச் விபத்துச் சம்பவம் குறித்து அக்கரைப்பற்று காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி