அனுமதியின்றி கட்டப்படும் அரச கட்டிடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : தவிசாளர் அறிவிப்பு

Jaffna Government Of Sri Lanka Nagalingam Vedanayagam
By Independent Writer Jun 20, 2026 06:13 AM GMT
Report

அரச திணைக்களங்களே அதிகமாக உள்ளூராட்சிச் சட்டங்களை மீறுவதாகவும், அரச நிதியில் அமைக்கப்படும் கட்டிட நிர்மாணங்களில் 90 வீதமானவை கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்வதில்லை எனவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவ்வாறான திணைக்களங்கள் தண்டத்துடன் உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் இல்லையெனில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சாதாரண தர பரீட்சை : 9 பாடங்களிலும் "ஏ" சித்தி பெற்ற மாணவர்கள்

சாதாரண தர பரீட்சை : 9 பாடங்களிலும் "ஏ" சித்தி பெற்ற மாணவர்கள்

ஆளுநரின் அறிவுறுத்தல் 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளுநரின் அறிவுறுத்தலின் பிரகாரம் எமது சட்டங்களின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு வியாபார உரிமம் வழங்கப்படுவதாயின் குடிபுகு சான்றிதழ் பெற கட்டாயப்படுத்துகின்றோம்.

அனுமதியின்றி கட்டப்படும் அரச கட்டிடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : தவிசாளர் அறிவிப்பு | Action Against Govt Buildings Without Permits

இவ்விடயத்தில் ஆளுநரின் அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது. மக்கள் மட்டுமல்ல அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சட்டத்திற்குக் கட்டுப்படவேண்டும். சட்டங்களை உச்சமாக மக்கள் மீது மட்டும் பிரயோகித்து நாம் சட்டத்தின் ஆட்சி என புலகாங்கிதம் அடைய முடியாது.

அரச நிறுவனங்களின் கட்டுமானங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் அரச கட்டிடங்கள் உள்ளூராட்சியின் அனுமதி பெறாது உள்ளது. குடிபுகு சான்றிதல் இல்லை. பாடசாலைகள் கூட அனுமதி பெறுவதில்லை.

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நீதிமன்ற அனுமதி

ஆகவே இக் கட்டிடங்களில் சுகாதாரம், உரிய பாதுகாப்பு, பயன்பாட்டு அங்கீகாரம் இன்றி தான்தோன்றித்தனமாக உள்ளூராட்சிச் சட்டங்களை மீறி பல அரச நிறுவனங்கள் செயற்படுகின்றன.

அனுமதியின்றி கட்டப்படும் அரச கட்டிடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : தவிசாளர் அறிவிப்பு | Action Against Govt Buildings Without Permits

தனியாரின் கட்டிடங்கள் தொடர்பாக நீதிமன்றம் சென்று இடித்தளிப்பதற்கான அனுமதியைப் பெறும் எமது உள்ளூராட்சி மன்றங்கள் அரச தாபனங்கள் விடயத்தில் மக்களுக்கு மட்டும் சட்டம் ஏனையோருக்கு விடுபாடு என கூற இயலாது.

ஆகவே அமைக்கப்பட்ட அரச கட்டுமாணங்கள் தொடர்பில் விரைவாக பரிசீலித்து அனுமதிக்க நாம் தயார். நாம் சில நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடிக்கத் தயாராகவுள்ளோம்.“ என தெரிவித்துள்ளார். 

குவைத்திடமிருந்து இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

குவைத்திடமிருந்து இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017