புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Air Force
By Abi Apr 10, 2026 11:24 AM GMT
Report

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகத் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன இன்று (10.04.2026) காலை பேருந்து நிலையத்திற்கு நேரடி கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“பேருந்து நிலையத்தின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவது ஒரு திட்டமிட்ட குழுவின் செயல். இதனைத் தடுக்கக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு..

இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு..

சதி முயற்சி

குறிப்பாகப் பெண்கள் கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த நீர்க்குழாய்கள் முதல் நாள் திருடப்பட்டிருந்தன. அவை மீண்டும் பொருத்தப்பட்ட நிலையில், நேற்று (09.04.2026) இரவும் இரண்டாவது முறையாக அவை கழற்றிச் செல்லப்பட்டுள்ளன.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை! | Action Against Those Who Damage At Bus Station

இது அறியாமையினால் செய்யப்படும் செயலல்ல, மாறாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் ஒரு சதி முயற்சி. அரசியல் ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த இன்று விசேட பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.

அடுத்த மூன்று மாத காலத்திற்கு பேருந்து நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை விமானப்படையினர் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர்.

பல்கலை மாணவர்களுக்கு இடையே முற்றிய மோதல்...! ஒருவர் பலி

பல்கலை மாணவர்களுக்கு இடையே முற்றிய மோதல்...! ஒருவர் பலி

அவதூறுப் பிரச்சாரங்கள்

தற்போது அங்குள்ள சிசிரிவி கெமராக்களின் (CCTV cameras) எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால், கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த மேலதிக கமராக்களைப் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்றார்.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை! | Action Against Those Who Damage At Bus Station

சமூக வலைத்தளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பிரசாரங்கள் ஒருபுறமிருக்க, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள பிரதி அமைச்சர், சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.      

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் கெடுபிடி...! ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் கெடுபிடி...! ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகிறது பாகிஸ்தானின் தலைநகரம்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகிறது பாகிஸ்தானின் தலைநகரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026