அடுத்த மாதம் புதிய கட்சி - சம்பிக்க பகிரங்க அறிவிப்பு..!
அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறித்த கட்சி ஐக்கிய குடியரசு முன்னணி என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “அடுத்த மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும், ஏனெனில் இந்த நாட்டை இந்த திவால்நிலையிலிருந்து காப்பாற்ற, தகுதி அடிப்படையிலான அரசியல் இயக்கம் தேவை.
குடும்ப அரசியல்
குடும்ப பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும், எங்களுக்குத் தேவை இலஞ்சம் கொடுத்து இலங்கையின் விருப்பங்களை வெல்லும் அரசியலை மாற்ற வேண்டும்.
அந்த அரசியல் முற்றுபெற்றுவிட்டு விட்டது. சோசலிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு பதிலாக புதிய நடைமுறைவாதத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசியல் சித்தாந்தம் வேண்டும்.அதை மே மாதம் வெளிக்கொணருவோம்." என தெரிவித்தார்.
