இலங்கைக்கு வழங்கிய யானைகளை திரும்பப் பெறும் தாய்லாந்து அரசாங்கம்
தாய்லாந்து அரசு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய இரண்டு யானைகளை திருப்பி பெற திட்டமிட்டுள்ளது.
ஒக்டோபர் 28 ஆம் திகதி இலங்கை அரசுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று தாய்லாந்து அரசு தெரிவித்ததாக தாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு யானைகளையும் இலங்கை மோசமாக பராமரித்து வருவதால் தாய்லாந்து அரசு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
முதல் யானைக் குட்டி
2023 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட 'முத்துராஜா' என்று அழைக்கப்படும் பிளே சக் சுரின், திரும்பப் பெறுவதற்கு பின்பற்றப்பட்ட அதே செயல்முறையே இந்த இரண்டு யானைகளையும் திருப்பி பெறுவதற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரும்பப் பெறப்படவுள்ள இரண்டு யானைகளும் பிளே பிரது பா மற்றும் பிளே ஸ்ரீனாரோங் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த யானைகளில் ஒன்று 1979 ஆம் ஆண்டு 12 வயதில் தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட முதல் யானைக் குட்டி என்றும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |