இஸ்ரேலை அதிரவைத்த ஈரானின் 40வது அலை தாக்குதல்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4 (Operation True Promise 4) நடவடிக்கையின் 40வது அலை தாக்குதலை நடத்தியுள்ளது.
இது ஹிஸ்புல்லா உடன் இணைந்து நடத்தப்பட்ட பெரிய அளவிலான பதிலடி தாக்குதலாகும்.
IRGC வெளியிட்ட அறிக்கையின்படி,
இந்த 40வது அலை 5 மணி நேரம் நீடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் Qadr, Emad, Kheibar Shekan, Fattah உள்ளிட்ட பல்வேறு வகை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முக்கிய இலக்கு
இதில் முக்கிய இலக்குகளாக இஸ்ரேலில் டெல் அவிவ், ஹைஃபா, அல்-குட்ஸ், ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகள் இஸ்ரேலில் 50க்கும் மேற்பட்ட இலக்குகள் (IRGC கூற்றுப்படி) அமெரிக்காவின் பிராந்திய இராணுவ தளங்கள், உதாரணமாக Al-Azraq (ஜோர்தான்) மற்றும் Al-Kharj (சவுதி அரேபியா) தளங்கள் இந்த நடவடிக்கை "Ya Amir al-Mu’minin" (அமீர் அல்-முஃமினீன் - அலி இப்னு அபி தாலிப் அவர்களுக்கு அஞ்சலி) என்ற குறியீட்டு பெயரில் நடத்தப்பட்டுள்ளது.

IRGC அறிக்கையில் மேலும், "ஈரான் மீதான போர் நிறுத்தப்படும் வரை தாக்குதல்கள் தொடரும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |