அமெரிக்காவால் 10 நிமிடங்களில் ஈரானை அழிக்க முடியும் : ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி திறன்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது. ஒன்று அல்லது இரண்டு தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றை 10 நிமிடங்களில் அமெரிக்காவால் அழிக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நிருபர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ”நிலத்தடியில் அமைந்துள்ளதாக கருதப்படும் பிக்ஆக்ஸ் மவுண்டன் அணுசக்தி வளாகத்தை பற்றி அறிவீர்கள். அதை எங்களால் மிக விரைவாக அழிக்க முடியும்.
ஈரான் ஒரு ஒப்பந்தத்தை செய்ய விரும்புகிறது. அதை பொறுத்திருந்து பார்ப்போம். பேச்சுவார்த்தைகள் நன்றாகத்தான் நடக்கின்றன.
பின்வாங்குகிறார்கள்
ஆனால் அவர்கள் அவ்வளவு நம்பகமானவர்கள் அல்ல. அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்துவிட்டு பிறகு அதிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுதொடர்பில் ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி, ”ஈரான் மீது மீண்டும் போர் தாக்குதலை தொடங்க அமெரிக்கா தயாராகி வருகிறது என்று தகவல் வெளியானது. வருகிற 3ஆம் திகதி நடக்கும் அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு தாக்குதல்கள் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்த நிலையில்தான் ட்ரம்ப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |