பாரிய விபத்தில் சிக்கிய பிரபல திரைப்பட நடிகர் - நிலைமை கவலைக்கிடம்
உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திரைப்பட நடிகரான ஜெர்மி ரென்னர் விபத்தில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவை பாதித்த மோசமான வானிலையுடன் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் சிக்கியதால் ஜெர்மி ரென்னர் குறித்த ஆபத்தில் சிக்கியுள்ளார்.
அவர் தனது வீட்டிற்கு அருகில் பனியை அகற்றும் போது விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நிலைமை கவலைக்கிடமாக
விபத்தின் பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புகழ்பெற்ற மார்வெல் திரைப்படத்தின் நடிகரானஅவர், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
51 வயதான ரென்னர், "தி ஹர்ட் லாக்கர்" மற்றும் "தி டவுன்" ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டு ஒஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
Lake Tahoe snowfall is no joke #WinterWonderland pic.twitter.com/6LBG9DsLAU
— Jeremy Renner (@JeremyRenner) December 12, 2022


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
