கோடிக்கணக்கில் பணமோசடி: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
தமிழ் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் (Powerstar Srinivasan) பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், ரூபாய் ஐந்து கோடி மோசடி வழக்கில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயிரம் கோடி கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்து பலரிடம் இருந்து சுமார் ஐந்து கோடி வரை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரணை நடவடிக்கை
அத்தோடு, இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு இதே போன்ற மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அளித்த தகவலின்படி, சீனிவாசன் இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்றும், 2018 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தலைமறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பு
விசாரணையில், அவர் திரைப்படத் தயாரிப்பு மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நிதி ஆதாரங்களை மோசடியாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
அத்துடன், சென்னையில் மேலும் ஆறு மோசடி வழக்குகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா
