பியுமி ஹன்சமாலியிடம் ஒன்பது மணிநேரம் தொடர் விசாரணை
இலங்கை நடிகை பியுமி ஹன்சமாலியிடம் (Piumi Hansamali) சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு ஒன்பது மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
குறித்த விசாரணையானது நேற்று (06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பியுமி ஹன்சமாலிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் தொடர்பாக குறித்த விசாரணை ஒன்பது மணிநேரம் நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள்
60 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடத்தியதாக பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து பியுமி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பியுமி ஹன்சமாலிக்கு சொந்தமானது என கூறப்படும் சொகுசு வாகனம் நாவலையிலுள்ள உள்ள இந்த சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் வீட்டில் அண்மையில் மீட்கப்பட்டது.
இந்த சந்தேக நபர் குறித்த வாகனத்தை பியுமி ஹன்சமாலியிடம் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா
