இலங்கையின் பிரபல நடிகையை கைது செய்த காவல்துறை
Sri Lanka Police
Galle Face Protest
Gota Go Home 2022
By Sumithiran
இலங்கையின் பிரபல நடிகை கைது
இலங்கையின் பிரபல நடிகையும் காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்ட களத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான தமிதா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள் புரட்சியின்போது அதிபர் செயலகத்திற்குள் அத்துமீறி புகுந்தார் எனத் தெரிவித்தே அவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் ஆர்ப்பாட்டம்
காலி முகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், சிவில் சமுகத்தினர் உள்ளிட்ட மேலும் பலர் இணைந்து பத்தரமுல்லையில் உள்ள தியதஉயன பகுதியில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திலும் நடிகை தமிதா கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

