கணினி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விசாரணை - கைதான ஆதர்ஷா
ஆஷு மாரசிங்க வழக்கில் பிரதிவாதியாக கருதப்பட்ட ஆதர்ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை கணினி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விசாரணை ஒன்றை மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.
ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேட்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைக்கு மாறான முறை
இதேவேளை, ஆஷு மாரசிங்க தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், தன்னை முன்பிணை மனு மூலம் விடுவிக்குமாறு கோரி ஆதர்ஷா தாக்கல் செய்திருந்த பிணைமனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
மேலும் விண்ணப்பதாரருக்கு எதிர்பார்த்த பிணையை வழங்குவது பொருத்தமானதல்ல என தீர்ப்பை அறிவித்த கொழும்பு பிரதான நீதவான் திரு.பிரசன்ன அல்விஸ் தெரிவித்தார்.
ஆஷு மாரசிங்க ஒரு நாயுடன் இயற்கைக்கு மாறான முறையில் நடந்து கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது தரப்பு வாதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக விண்ணப்பதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதால், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டால் அது விசாரணைக்கு இடையூறாக அமையும் என ஆஷு மாரசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
