வில்வித்தைக்கான போட்டிகளில் உலக அரங்கில் முதலாவது தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!
வில்வித்தை போட்டிகளில் உலக அரங்கில் இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார்.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியானது ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றைய தினம் (05) பெண்களுக்கான தனிநபர் பிரிவினருக்கான இறுதிச்சுற்று இடம்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் போட்டியிட்ட 17 வயதுடைய இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வீராங்கனை அதிதி ஸ்வாமி 149-147 என்ற புள்ளிக்கணக்கில் மெக்சிகோவின் ஆன்ட்ரியா பிசெர்ராவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
முதல் இந்திய வீராங்கனை
இதன் வாயிலாக அதிதி உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
அத்துடன் பெரியோருக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையையும் சொந்தமாக்கியுள்ளார்.
நடப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அதிதி வென்ற 2-வது தங்கப்பதக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அதிதி கூறுகையில், நமது நாட்டுக்கான முதலாவது தங்கப்பதக்கத்தினை நான் வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், இது ஆரம்பம் தான் அடுத்து நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு நாட்டுக்காக பதக்கம் வெல்ல விரும்புகிறேன் என்றுதெரிவித்திருந்தார்.