காலாவதியான உளவுத்தகவலால் ஈரானில் 175 மாணவிகளை பலியெடுத்த அமெரிக்கா
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள 'ஷஜாரா தயாபா' பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 175 மாணவிகள் துடிதுடித்து பலியாகினர்.
பாடசாலை மீதான தாக்குதல் அமெரிக்க ஏவுகணையால் நடத்தப்பட்டது என்று தகவல் வெளியானது. ஆனால் பாடசாலையை ஈரான் இராணுவமே தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
தாக்குதலை அமெரிக்க இராணுவமே நடத்தியதற்கான காணொளி
இதற்கிடையே 175 மாணவிகள் கொல்லப்பட்ட இந்த தாக்குதலை அமெரிக்க இராணுவமே நடத்தியதற்கான காணொளி மற்றும் செயற்கைகோள் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகின.
New video footage shows a US Tomahawk missile hitting an IRGC facility in Minab, Iran, on Feb 28, showing for the first time that the US struck the area. The footage also shows smoke already rising from the vicinity of the girls’ school, where 175 people were reportedly killed. pic.twitter.com/4jBXrNcRJO
— Trevor Ball (@Easybakeovensz) March 8, 2026
தாக்குதலுக்கு உள்ளான காணொளி மற்றும் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், இது அமெரிக்காவின் 'டோமாஹாக்' (Tomahawk) குரூஸ் ஏவுகணை என்பது தெரியவந்தது.
அருகிலுள்ள ஈரானிய இராணுவத் தளத்தைத் தாக்கும் போது அமெரிக்க இராணுவம் தவறுதலாக பள்ளிக் கட்டிடத்தைக் குறிவைத்ததாக கூறப்பட்டது.
காலாவதியான தவறான உளவுத் தகவல்
இந்நிலையில் ஈரான் பள்ளி தாக்குதல் குறித்து அமெரிக்க இராணுவம் உள் விசாரணை நடத்தி வருகிறது.அமெரிக்க அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்க இராணுவமே இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமாகியுள்ளது.
ஆரம்பக்கட்டத் தகவல்களின்படி, காலாவதியான தவறான உளவுத் தகவல் காரணமாகவே இந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
அந்தப் பள்ளி முன்பு அந்த இராணுவ தளத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்றும் அது பின்னர் பிரிக்கப்பட்டதை அறியாமல் புலனாய்வு அமைப்பு (INTEL) வழங்கிய காலாவதியான உளவுத்துறைத் தரவைப் பயன்படுத்தி அமெரிக்க மத்திய கட்டளை அதிகாரிகள் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |