எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் மாதாந்த விலை குறித்து சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையில் இம்மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவிக்கையில், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையிலேயே நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
நாங்கள் வழக்கமாக மாதாந்த சராசரி விலையையே கருத்தில் கொள்கிறோம் என்பதால், இந்த தருணத்தில் விலை உயருமா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது.

எங்களுக்கு இந்த மாதம் நிறைவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. எனவே, அந்த எஞ்சிய நாட்களில் உலகச் சந்தையில் விலை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பொறுத்தே நாங்கள் இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
இதேவேளை, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடைகள் ஏற்படும் என்ற அச்சத்திற்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக பீப்பாயொன்று 100 டொலரை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |