முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுதா ஜனாதித் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் விதித்துள்ளார்.
20 மில்லியன் ரூபாய் மோசடி
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 21ஆம் திகதி கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் குறித்த 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |