துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1000 வாகனங்கள் - பறந்த உத்தரவு
துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border Letters of Credit - LCs) தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, இந்தநிலை ஏற்ப்பட்டுள்ளது.
விரைவாக விடுவிக்க நடவடிக்கை
இந்தப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக வாகனங்களை விடுவிக்க முடியாமல், தாம் பல்வேறு சிரமங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தற்போது காணப்படும் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப தடைகளை நிவர்த்தி செய்து, துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த விடயத்தில் அதிகாரிகளின் துரிதமான தலையீட்டை எதிர்பார்த்துள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |