முன்னாள் விமானப் படை தளபதி FCIDயில் முன்னிலை!
புதிய இணைப்பு
முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இன்று (10) காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த விசாரணை பிரிவில் இன்று காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
முதலாம் இணைப்பு
அநுர அரசின் அதிரடி : முன்னாள் விமானப்படை தளபதிக்கு FCID அழைப்பு!
முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலகவை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, இன்று (10) காலை 9.30 மணிக்கு அந்த விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்தல்
குறித்த கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகவே முன்னாள் விமானப்படை தளபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25