ஜூன் மாதத்தில் சொகுசு வாகனப் பதிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த வாகனப் பதிவுகளில் வீழ்ச்சி நிலவியபோதிலும், சொகுசு வாகனப் பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், மே மாதத்தில் 62,776 ஆகக் காணப்பட்ட மொத்த வாகனப் பதிவுகள், ஜூன் மாதத்தில் 58,151 ஆகக் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், உயர் வருமானம் பெறும் நுகர்வோரின் தேவைகள் காரணமாகச் சொகுசு வாகனப் பிரிவு ஸ்திரமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் ஜூன் மாதத்தில், 26 புத்தம் புதிய சொகுசு வாகனங்களும், 121 பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்களும் பதிவு செய்யப்பட்டன.
ஜூன் மாதத்தில் அதிகரிப்பு
மெர்சிடீஸ் பென்ஸ் சந்தையில் முன்னிலையில் உள்ள நிறுவனமாக விளங்குவதுடன், 20 புதிய வாகனங்களும் 39 பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் அதில் பதிவாகியுள்ளன.

மேலும், ரோல்ஸ் ரோய்ஸ் ஃபான்டம் , பென்ட்லி பென்டேகா மற்றும் பெராரி போன்ற அதிநவீன சொகுசு வாகனங்களும் இந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று, பயணிகள் வாகனப் பிரிவில் SUV மற்றும் Crossover ரக வாகனங்களின் பதிவு மே மாதத்தில் இருந்த 5,511 இலிருந்து ஜூன் மாதத்தில் 5,933 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |