மூதூரில் வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் ஒருவர் கைது
திருகோணமலை மூதூர் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இலங்கை கடற்படையினர் நேற்று (09.10.2026) மேற்கொண்ட விசேட தேடுதலின் போது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய பொடுவைக்கட்டு - செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூதூர் கடற்றொழில் பரிசோதகர்
இலங்கை கடற்படையின் SLNS பராக்கிரம நிறுவனத்துக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், SLNS கோகண்ண நிறுவனத்துடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்ட கடற்படையினர், வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 820 கிலோகிராம் மீன்களுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர், லொறி மற்றும் மீன்தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மூதூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |