கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து : 22 பேர் காயம்
Sri Lanka Police
Polonnaruwa
Sri Lanka Police Investigation
By Sathangani
பொலன்னறுவையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலைகளில் அனுமதி
பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற குறித்த பகுதி அடிக்கடி விபத்துக்கள் நிகழும் ஒரு பகுதியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்