வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வீட்டுக் கடன் திட்டம் : வெளியான அறிவிப்பு
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
'எதெர திரிய' என்ற இந்த புதிய வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
அத்துடன், கடன்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய வட்டியின் ஒரு பகுதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) மீளச் செலுத்தப்படவுள்ளது.

இதன் மூலம், வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிதிச்சுமை பெருமளவு குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுவதுடன், அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் ஈட்டும் வருமானத்தைப் பாதுகாப்பான மற்றும் இலகுவான வீடமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்த வீட்டுவசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25