வீழ்ச்சியின் விளிம்பில் ஈரானிய ஆட்சி! நெதன்யாகுவின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்
மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஆட்சி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு, தெற்கு சிரியாவில் உள்ள இஸ்ரேலியப் படைகளை நேரில் சென்று பார்வையிட்டபோது இதனை கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உடன், இஸ்ரேல்-சிரிய எல்லையில் அமைந்துள்ள ஹெர்மன் மலையின் சிரியப் பகுதியில் நின்று பேசிய அவர், "இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியை வீழ்த்துவதே நமது முக்கிய பணியாகும்.
ஈரான் ஆட்சியின் வீழ்ச்சி
நாம் அதை அடைவதற்கு மிக அருகில் இருக்கிறோம். அந்த முழு கூட்டணியும் இறுதியில் வீழும் என்பதை நாம் அறிவோம்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Image Credit: jewishchronicle
சிரியாவை நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத்தின் ஆட்சி டிசம்பர் 2024-இல் வீழ்ந்ததைத் தொடர்ந்து, தெற்கு சிரியாவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மண்டலத்தில் இஸ்ரேலியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
1974 முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் பகுதியில் இஸ்ரேல் மற்றும் சிரியப் படைகளைப் பிரித்து வைத்திருந்த, ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட பழைய இடைப்பட்ட பகுதியையே தற்போது இப்படைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |