ஈரானின் தாக்குதல் முயற்சிகள் படுதோல்வி! அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு
மத்திய கிழக்கில் அமெரிக்கக் கடற்படையின் இரண்டு அழிப்புக் கப்பல்களைத் தாக்கியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் (IRGC) விடுத்திருந்த அறிக்கையை அமெரிக்க இராணுவத்தின் மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) மறுத்துள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் எந்தவொரு போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை எனவும் IRGC மேற்கொண்ட அனைத்துத் தாக்குதல் முயற்சிகளும் தோல்வியடைந்தன எனவும் அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வளைகுடாப் பகுதியில் இரண்டு அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் எட்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்களைத் தங்கள் கடற்படை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும், இத்தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் IRGC கூறியிருந்தது.
தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்கள்
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்திருந்தது.

எனினும், கடந்த வாரத்தில் ஈரானின் 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.
இக்கப்பல்கள் IRGC-க்கு நிதியளிக்கும் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள நிழல் வலைப்பின்னலின் ஒரு பகுதி என்று அமெரிக்க இராணுவம் விவரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25