ஈரான் போரின் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் அமெரிக்கா நாடவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவர்களுக்குத் தேவையானது அணு ஆயுதம் மட்டுமே; அவர்களிடம் அணு ஆயுதம் கிடைத்துவிட்டால், ஒட்டுமொத்த உலகமும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்.
பேச்சுவார்த்தைகள்
நாம் அணுசக்தி விவகாரத்தைக் கையாளப் போகிறோம். மூன்று மாதங்களுக்கு முன்பு பரிசீலனையில் இல்லாத பல விடயங்கள் இப்போது விவாத மேசைக்கு வரவுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: citynews.ca
தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, "உண்மையைச் சொல்லப்போனால், நாங்கள் அதை நாடவில்லை. நிலைமை வெகுதூரம் சென்றுவிட்டது.
இப்போது அவர்களிடம் எஞ்சியிருப்பது மிகச் சிறிய அளவிலான நாடே. ஆம், பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது. எங்கள் தேர்தலுக்குப் பிறகு இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரும்" என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |