அமெரிக்காவிற்கு பேரிடி : ஹோர்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை கைப்பற்றியது ஈரான்
அமெரிக்க இராணுவத்தின் மிகவும் நவீனமான திறன்மிக்க ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கைப்பற்றியுள்ளது.
இந்த நீர்மூழ்கி கப்பலானது மேல் தளத்திற்கு திரும்பாமல் 10 நாட்கள் வரை செயல்படக்கூடியது என்றும் 6,000 மீட்டர் ஆழம் வரையில் மூழ்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அன்டுரிலின் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
‘டைவ் எல்டி’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்
இதுகுறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான செபா நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘டைவ் எல்டி’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Footage released by Iranian media shows what the IRGC claims is an American Dive-LD unmanned submarine captured today. Iran says the vessel is now in its possession. pic.twitter.com/POWlEHHnd5
— Open Source Intel (@Osint613) September 8, 2026
மேலும் ஹோஸ் நீரிணைக்கு மேல் பறந்த MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் பதில் அறிக்கை
ஈரான் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிராந்திய கடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, ஒரு நாளுக்கு முன்பு அமெரிக்க ஆளில்லா விமானங்களில் ஒன்று செயல் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் குறித்து கூறுகையில், தரவுகளை சேகரிக்கவோ அல்லது இரகசிய சோனார் மற்றும் ராடர் கருவிகள், அந்த ட்ரோனில் இடம்பெறவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |