நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை! வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு சிக்கல்
முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைதை மையப்படுத்தி அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த குறித்த முறைப்பாடு, நேற்று (08) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர்பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த முறைப்பாட்டில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |