இந்தியா - இலங்கை உறவு வரலாற்றை அடிப்படையாக கொண்டது! ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டு
இந்தியா - இலங்கை இடையிலான உறவுகள் பகிரப்பட்ட வரலாறு, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டதாகும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகைத்தந்துள்ள அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்தியாவும் இலங்கையும் மிகவும் நெருக்கமான நட்புநாடுகள். சகல இன்ப துன்பங்களிலும் இலங்கையுடன் இணைந்திருக்கும் நாம், இரு நாடுகளினதும் சமாதானம், செழுமை மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டினைக் கொண்டிருக்கின்றோம்.
இந்திய புலம்பெயர் சமூகம்
இலங்கையின் கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடியமையையிட்டு மகிழ்வடைகின்றேன். இந்தியா - இலங்கை இடையிலான நட்புறவை வலுவாக்குவதில் இந்திய புலம்பெயர் சமூகம் மிகவும் முக்கியமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 'சேதுவாக (பாலமாக)" இந்திய சமூகம் திகழ்கின்றது. இலங்கை எப்போதெல்லாம் நெருக்கடியினை எதிர்கொள்கின்றதோ, அப்போதெல்லாம் இந்தியா இலங்கையுடன் தோளோடு தோள் துணை நிற்கும்.
இந்தியாவில் இலத்திரனியல் உற்பத்தித் துறை ஒரு தொழில் புரட்சியாகும். 2014 இல் இந்திய ரூபா 1.9 லட்சம் கோடியாக இருந்த இலத்திரனியல் பொருட்களின் உற்பத்தி, தற்போது இந்திய ரூபா 11 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் பகிரப்பட்ட வரலாறு, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவும் இலங்கையும் மிகவும் நெருக்கமான நட்புநாடுகள். சகல இன்ப துன்பங்களிலும் இலங்கையுடன் இணைந்திருக்கும் நாம், இரு நாடுகளினதும் சமாதானம், செழுமை மற்றும்… https://t.co/yMT3v0WlIj
— India in Sri Lanka (@IndiainSL) September 9, 2026
அத்துடன் இலத்திரனியல் பொருட்களின் ஏற்றுமதியும் இந்திய ரூபா 38,000 கோடியிலிருந்து இந்திய ரூபா 3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல, கைத்தொலைபேசி உற்பத்தியில், இந்தியா இன்று உலகின் இரண்டாவது பாரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24