யாழ். வடமராட்சியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை!
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் 33 வயதான இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை - கிராமக்கோடு பகுதியில் நேற்று (09/09/2026) இரவு 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொலை செய்யப்பட்ட நபர் கடையில் வெற்றிலை வாங்கிக்கொண்டு வெளியே நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி புறப்பட முற்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது எதிரே வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து வாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில் பருத்தித்துறை நீதவான் இன்று (10) காலை 11:00 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் தடய ஆய்வு காவல்துறையினரும் சம்பவ இடத்தை ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறை பொறுப்பதிகாரி தலைமையில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

