அமெரிக்காவில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹிட்லரின் கடிகாரம்(படங்கள்)
ஜேர்மனியின் முன்னாள் அதிபர் அடோல்ப் ஹிட்லர் (சர்வாதிகாரி) பயன்படுத்திய கைக்கடிகாரம் மேரிலேண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஏலத்தின் போது, விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த கடிகாரம் ஏல விற்பனையில் 1.1 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், அந்த கைக்கடிகாரத்தில் AH என்ற இரண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்வாஸ்திக் மற்றும் நாசி கழுகு என்பனவும் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த ஏல விற்பனையை யூதர்கள் கண்டித்துள்ளனர். 34 யூத தலைவர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை மேரிலேண்ட் ஏல விற்பனை நிறுவனமான அலெக்ஸ்சாண்டர் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதுடன் கடிகாரத்தை விற்பனை செய்ய வேண்டாம் என கோரியுள்ளனர்.
எனினும், வரலாற்றை பாதுகாப்பது தமது நோக்கம் என ஏல விற்பனை நிறுவனம் ஜேர்மனிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.
இந்த கடிகாரம் 1933 ஆம் ஆண்டு ஹிட்லருக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




