ஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல்!! 50 பேர் பலி
Afghanistan Bomb Blast
By Vanan
ஆப்கானிஸ்தானில் உள்ள மதவழிபாட்டுத் தளம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில், ஹலிபா ஷகிப் என்ற இஸ்லாமிய மதவழிபாட்டு தளம் உள்ளது. ரமலான் மாதம் என்பதால் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாட்டு தளத்தில் அதிகளவானோர் வழிபாடு செய்ய குவிந்திருந்தனர்.
குறித்த மதவழிபாட்டுத் தளத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்