இரண்டாக உடையும் ஆபிரிக்கா - உருவாகும் புது கடல்..!
உலகின் இரண்டாவது மிகப் பெரிய கண்டமாகக் கருதப்படும் ஆபிரிக்கா இரண்டாகப் பிளக்க உள்ளது. இதன் மூலம் நமது பூமியில் மற்றொரு பெருங்கடலும் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உலகம் பல ஆச்சரியங்களையும் மர்மங்களையும் உள்ளடக்கியது.. பூமி குறித்து நாம் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகளைச் செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆய்விலும் நாம் புது புது விஷயங்களைக் கண்டறிந்து வருகிறோம்.
வரும் காலத்தில் ஆபிரிக்கா படிப்படியாக இரண்டு தனித்தனி பகுதிகளாகப் பிரியும் என்றும் இதனால் புதிய கடல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்படும் பிளவு காரணமாக இது ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தவிர்க்க முடியாத உயிரிழப்பு

கிழக்கு ஆபிரிக்கப் பிளவு என்பது 2005இல் எத்தியோப்பியா பாலைவனத்தில் தோன்றிய 56 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு விரிசலாகும். இதுவே மெல்லப் பெரிதாகி ஆபிரிக்கக் கண்டத்தையே பிரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது நிச்சயம் ஆபிரிக்கக் கண்டத்தைப் பிளக்கும் என்றும் இதை நம்மால் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது நிலத்தால் சூழப்பட்ட நாடுகளாக இருக்கும் உகாண்டா மற்றும் ஜாம்பியா உள்ளிட்ட நாடுகள் அருகே கடல் வந்துவிடும்.
இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளும் ஏற்படக் கூடும். உயிரிழப்புகளை நம்மால் தவிர்க்கவே முடியாது. அதேபோல பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய ஒரு சூழலும் ஏற்படும்.
அதேநேரம் இதனால் மனித இனத்துக்கு சார்பான விளைவுகளும் ஏற்படவே செய்யும். அதாவது கடல் அருகே வருவதால் புதிய பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
துறைமுகங்கள், மீன்பிடித் தளங்கள், கடலுக்கு அடியே இணைய உள்கட்டமைப்பு எனப் பல வளர்ச்சி திட்டங்கள் சாத்தியம் உள்ளதால் பொருளாதார வளர்ச்சியும் வேகமெடுக்கும். எனவும் தெரிவித்துள்ளனர்